உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்திற்கு வீடு கட்டுவற்தகான பொருட்கள் வழங்கல்

பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்திற்கு வீடு கட்டுவற்தகான பொருட்கள் வழங்கல்

புவனகிரி : புவனகிரி அடுத்த ஆதிவராக நல்லுார் கிராமத்தில் வசிக்கும் இருளர் குயிருப்பு கனமழையால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அப்பகுதியினர் கோரிக்கையின் பேரில் தி.மு.க., மாநில பொறியாளர் அணித் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் நேரில் பார்வையிட்டு குடும்பத்தினர்களூக்கு நிவாரணப்பொருட்கள் மற்றும் குடிசை வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகட்டும் நோக்கில் கீற்று, கயிர், மரங்கள் உள்ளிட்ட பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதிநாகலிங்கம், ஊராட்சி பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !