மேலும் செய்திகள்
மாணவ - மாணவியருக்கு புத்தகம் சீருடைகள் வழங்கல்
04-Jun-2026
கடலுார்: கடலுார் பயோனியர் ஜெல்லைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் செம்மங்குப்பம் மற்றும் சங்கொலிக்குப்பம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் பயோனியர் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஒளிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் பிரபா கரன் வரவேற்றார். கடலுார் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பயோனியர் ஜெல்லைஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ஜேசுரத்தனராஜ், விஜயகுமார், விக்னேஷ், லலிதா, ராஜசேகர், நம்பிராஜன், கணேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
04-Jun-2026