உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மை பணியாளர்களுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கல்

நெய்வேலி: நெய்வேலி அருகே துாய்மை பணியாளர்களுக்கு வாகனங்களை எம்.எல்.ஏ., வழங்கினார் . வடக்கு மேலூர் ஊராட்சியில் மக்கள் குறைகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கேட்டறிந்து தீர்வு காணும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். வடக்கு மேலுார், வானதிராயபுரம் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். பொதுப்பணித்துறை, வேளாண்மைத் துறை, உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், 45 வகை கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். மேலும், கீழூர், வாணதிராயபுரம், வடக்குத்து புலியூர், கோரணப்பட்டு ஊராட்சிகளை சேர்ந்த துாய்மை பணியாளர்களுக்கு குப்பை ஏற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார். மேலும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், மருத்துவ பயனாளர்களுக்கு மருந்து பெட்டகமும் வழங்கினார். நிகழ்ச்சியில், தாசில்தார் விஜய் ஆனந்த், பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், வெங்கடேசன், டாக்டர்கள் பாலச்சந்தர், ராமநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவை தலைவர் ராமச்சந்திரன், ஒன்றியப் பொருளாளர் ஆனந்த ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ