உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம சுகாதார சேவைக்கு பேட்டரி வாகனம் வழங்கல்

கிராம சுகாதார சேவைக்கு பேட்டரி வாகனம் வழங்கல்

புவனகிரி: கீரப்பாளையம் கிராம ஊராட்சிக்கு, தூய்மை பாரத இயக்கம் சார்பில் சுகாதார சேவைக்காக ரூ.6 லட்சம் செலவில் பசுமை வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் மாவட்ட துாய்மை பாரத இயக்கம் சார்பில் கிராமப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து ஓரிடத்தில் தரம் பிரித்து சரி செய்து வருகின்றனர். இதற்காக பசுமை வாகனம் (பேட்டரி) தலா ரூ.3 லட்சம் செலவில், இரண்டு வாகனம் வழங்கு நிகழ்ச்சி நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சபாநாயகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் ஆகியோர் கிராம சேவைக்கான வாகன சேவையை துவக்கி வைத்து, அதற்கான சாவியை ஊராட்சி செயலர் தங்கமுருகவேல் உள்ளிட்ட ஊழியர் களிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி