மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றித்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. பி.டி.ஓ., க்கள் வீராங்கன், செந்தில்வேல் முருகன் தலைமை தாங்கினர். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., 15 ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், துணை பி.டி.ஓ.,க்கள் பாலகிருஷ்ணன், முத்துராஜா, உதவி பொறியாளர்கள் ஜெயச்சந்திரன், சண்முகம், சிவசங்கர், தி.மு.க., நகர செயலாளர் செல்வகுமார், வி.சி., கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, தொகுதி துணைச் செயலாளர் வெற்றிவேந்தன், நகர செயலாளர் குப்புசாமி, வினோத், ஆனந்தமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Sep-2025