உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ., வழங்கல்

நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ., வழங்கல்

கடலுார்: பெரியகங்கணாங்குப்பம் முதியோர் இல்லத்திற்கு எம்.எல்.ஏ., அய்யப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் 70 இன்ச் டிவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசினார்.நிகழ்ச்சியில் லீமா அய்யப்பன், டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் மாறன், கண்ணன், கோகுல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் லட்சுமணன், துரை, நிர்வாகிகள் வனஜா, பிரபு, சதீஷ், உமாபதி, பாலு, ராஜு, அருள், பிரபு, ராஜா, நட்ராஜ், லோகு,விஜி, சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை