பெரியாக்குறிச்சி பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரோட்டரி கிளப் ஆப் லிக்னைட் சிட்டி சார்பில், பெரியாக்குறிச்சி வடக்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு புதுப்பிக்கப்பட்ட கட்டடம் மற்றும் குடிநீர் சுத்தகரிப்பு சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ரத்னா வரவேற்றார். மாவட்ட திட்ட தலைவர் மிட்டல்தாஸ், மாவட்ட பொறுப்பாளர் நாகரத்தினா ஆகியோர் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் மற்றும் குடிநீர் சுத்தகரிப்பு சாதனம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க பொருளாளர் அலெக்ஸ் ஆண்டனி. சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், சந்திரமவுலி, செந்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.