பி.எஸ்.என்.எல்., சேவை மையங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
கடலுார்; பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;. நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, அரகண்டநல்லுார், சிதம்பரம், சிதம்பரம் வண்டிகேட், காட்டுமன்னார்கோவில், உளுந்துார்பேட்டை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், சங்கராபுரம் ஆகிய 12 இடங்களில் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க வரும் 17 ம் தேதி டெண்டர் மூலம் டீலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் வரும் 16ம் தேதி மாலை 4:௦௦ மணிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை https://www.etenders.gov.in/eprocure/app இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். டெண்டர் முறையில் தேர்வு செய்யப்படும் டீலர்கள், முதற்கட்டமாக மூன்று ஆண்டிற்கு நியமிக்கப்படுவர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நீட்டிப்பு பெற வாய்ப்பு உள்ளது.சேவை மையங்களில் பி.எஸ்.என்.எல்.,ப்ரீபெய்ட், எம்.என்.பி., ஆக்டிவேஷன், ரீசார்ஜ், போஸ்ட்பெய்ட் மற்றும் பைபர் பில் பேமென்ட், புதிய பைபர் இணைப்புகள் பதிவு மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கி அதற்கான கமிஷன் தொகையை வருமானமாக பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.