பறிமுதல் வாகனங்கள் 23ம் தேதி பொது ஏலம்
கடலுார், ; கடலுாரில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 23ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.கடலுார் எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு;கடலுார் மாவட்ட தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு வழக்குகளில் நான்கு சக்கர வாகனங்கள் 7, மூன்று சக்கர வாகனங்கள் 1, இரண்டுசக்கர வாகனங்கள் 92 என மொத்தம் 100 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இந்த வாகனங்கள் வரும் 23ம் தேதி காலை 10:00 மணியளவில் கடலுார் ஆயுதப்படை வாளக எஸ்.ஆர்.ஜே., திருமண மண்டபத்தில் ஏலம் விடப்படுகிறது.வாகனங்கள் 21ம் தேதி முதல் கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். விவரங்களை நேரில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.