உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேம்பாலத்தில் விளக்குகள் பொதுமக்கள் கோரிக்கை

மேம்பாலத்தில் விளக்குகள் பொதுமக்கள் கோரிக்கை

பெண்ணாடம், : முருகன்குடி வெள்ளாறு மேம்பாலத்தில் பழுதான சோலார் விளக்குகளை அகற்றி, புதிதாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த முருகன்குடி வெள்ளாறு மேம்பாலம் வழியாக கிளிமங்கலம், மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, கணபதிகுறிச்சி, பெலாந்துறை, பாசிக்குளம் மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்கள் முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, முதுகுளம், புதுப்பாளையம், புக்குழி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். மேம்பாலத்தில் மின்விளக்கு வசதியில்லாததால் இரவு நேரத்தில் மக்கள் அச்சமடைந்தனர்.அதைத்தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நல்லுார் ஒன்றிய பொது நிதியில் 20 சோலார் விளக்குகள் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டன. ஆனால் பராமரிப்பின்றி உள்ள சோலார் விளக்குகள் பழுதடைந்து, காட்சிப்பொருளாக மாறியது. இதனால் அவ்வழியே செல்லும் சமூக விரோதிகள் அதிலிருந்த பேட்டரிகளை எடுத்துச்சென்றனர். இதனால், இரவு நேரத்தில் மேம்பாலம் இருள் மூழ்கியதால் இவ்வழியே நடந்து செல்லும் பொது மக்கள் பாலத்தை கடக்க அச்சமடைகின்றனர்.எனவே, முருகன்குடி வெள்ளாறு மேம்பாலத்தில் புதிதாக சோலார் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி