மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்
25-Mar-2025
கடலுார்; கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 1,020 மனுக்கள் பெறப்பட்டன. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பொதுமக்களிடமிருந்து 1,020 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அவுறுத்தினார். பின், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையை வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், தனித்துணை ஆட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
25-Mar-2025