ராகவேந்திரர் கோவிலில் லட்சார்ச்சனை
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் வரும் 25ம் தேதி, ஏகதின லட்சார்ச்சனை விழா நடக்கிறது.புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு தோறும் மே மாதம் ஏக தின லட்சார்ச்சனை விழா வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான லட்சார்ச்சனை விழா வரும் 25ம் தேதி காலை 5:00 மணிக்கு துவங்கி இரவு வரை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.