உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே கேட்டில் வேன் மோதல் 15 நிமிடம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

ரயில்வே கேட்டில் வேன் மோதல் 15 நிமிடம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், ரயில்வே கேட்டில் சரக்கு மினி வேன் மோதியதில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக சென்றது. நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்று காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் கேட் மூடப்பட்டது. கேட்டை மூடும் போது வேகமாக வந்த மினி சரக்கு வேன், கேட் மீது மோதியது. இதில் ஒரு பக்கம் ரயில்வே கேட் உடைந்தது. இதனால் ரயில் செல்ல சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் ரயில் நின்றது. அதன்பிறகு ரயில்வே கேட்டுக்கு பதிலாக சங்கிலி கட்டிய பிறகு சிக்னல் கிடைத்து ரயில் 11:45 மணிக்கு 15 நிமிடம் தாமதமாக சென்றது. இந்த சம்பவத்தால் ஆலைரோடு மற்றும் சரவணபுரம் ரயில்வே கேட்டுகளில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை