உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராமாபுரம் அரசு பள்ளி ஆசிரியர் வினாடி வினா போட்டியில் வெற்றி

ராமாபுரம் அரசு பள்ளி ஆசிரியர் வினாடி வினா போட்டியில் வெற்றி

கடலுார்; மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் மாவட்ட அளவில் நடந்த திருக்குறள் வினாடி- வினா போட்டியில் முதலிடம் பிடித்தார்.தமிழ் வளர்ச்சி துறை சார்பில், மாவட்ட அளவில் நடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி-வினா போட்டி கடலுாரில் நடந்தது. இதில், கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் செல்லசாமி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.மேலும், நெய்வேலியில் பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் இப்பள்ளியின் பிளஸ் 2 வகுப்பு மாணவர் சத்ரியன், ஜூடோ போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். ஆசிரியர் மற்றும் மாணவரை தலைமை ஆசிரியர் எல்லப்பன் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி