ரமேஷ்குமார்-மஞ்சுளா இல்ல திருமண வரவேற்பு விழா
கடலுார்; பண்ருட்டியில் இந்திய ஜெர்னலிஸ்ட் யூனியன் தேசியக்குழு உறுப்பினர் ரமேஷ்குமார் மஞ்சுளா இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.இந்திய ஜெர்னலிஸ்ட் யூனியன் தேசியக்குழு உறுப்பினர் ரமேஷ்குமார்-மஞ்சுளா தம்பதியரின் மகன் வழக்கறிஞர் பவித்ரராஜன் மற்றும் ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையம் சுப்பிரமணி-இளமதி தம்பதியரின் மகள் வழக்கறிஞர் ஹரிணி ஸ்ரீ ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, பண்ருட்டியில் நடந்தது.அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க.,கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், தே.மு.தி.க., துணை பொதுசெயலாளர் சுதீஷ், ஜெயப்பிரியா நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர், தொழிலதிபர் நாகூர்கனி, இந்திய ஜெர்னலிஸ்ட் யூனியன் அகில இந்திய தலைவர் ஸ்ரீனிவாச ரெட்டி, தெலுங்கானா மாநில தலைவர் விராகத், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், டாக்டர்கள், வணிகர் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.முன்னதாக உதவி பேராசிரியர் சக்திகணேஷ்-டாக்டர் பிந்துஓவியா மற்றும் ஸ்ரீகருப்பண்ணா குரூப்ஸ்பைனான்ஸ் ரகுபிரதீபன், பிரித்திகா ரகுபிரதீபன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். ஹர்ஷத்வர்மன் நன்றி கூறினார்.