உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று துவக்கி, கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கந்தன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் தேவராஜ், வட்ட தலைவர் குமரன் முன்னிலை வகித்தனர். தமிழ் செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் இருதயராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, மாநில பொருளாளர் சரவணன் கண்டன உரையாற்றினர். பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

பண்ருட்டி

வட்ட அமைப்பு தலைவர் ஹரி கோவிந்தன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஆஷா, சாந்தி, சரோஜினி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், கணேசமூர்த்தி, இளவரசன், முரளி பேசினர். ஒன்றிய தலைவர் புருஷோத்தம்மன் நன்றி கூறினார்.

சிதம்பரம்

மாவட்ட துணை தலைவர் நரசிம்மன், மாவட்ட இணை செயலாளர் கனகசபை, ஓய்வு பெற்ற ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் நடராஜர் வாழ்த்திப் பேசினர். மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா கண்டன உரையாற்றினார். வேல்முருகன், ஆனந்த், யோகராஜ், செந்தில்குமார், சிவராமன் பங்கேற்றனர்.

விருத்தாசலம்

மாவட்ட சிறப்பு தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். பிரகாஷ், பாலு, தியாகராஜன், ரவி, தணிகாசலம், ராஜேஸ்வரி பலர் பங்கேற்றனர். மாவட்டத்தில்,1000த்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்ததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை