உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுாரில், ரேஷன்கடை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர், பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, ரேஷன்கடை பணியாளருக்கு ஓய்வூதியம், அனைத்துக் கடைகளுக்கும் எடையாளர் நியமனம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மூன்றாம் நாளாக, கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கந்தன், துணைத்தலைவர் மணிகண்ட பூபதி தலைமை தாங்கினர். அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லதம்பி, முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி