உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தகம் வாசிப்பது மன அழுத்தத்தை போக்கும் மின் உற்பத்தி கழக சேர்மன் ராதாகிருஷ்ணன் அறிவுரை

புத்தகம் வாசிப்பது மன அழுத்தத்தை போக்கும் மின் உற்பத்தி கழக சேர்மன் ராதாகிருஷ்ணன் அறிவுரை

நெய்வேலி: புத்தகம் வாசிப்பு என்பது மன அழுத்தத்தை போக்கும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சேர்மன் ராதாகிருஷ்ணன் பேசினார். கடலுார் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில் 24வது புத்தகக் கண்காட்சியின் 7ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கி பேசுகையில், 'இந்தியா 2047 ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறும். அதற்கான இலக்கை அடைய அறிவுத்திறன் மிகவும் அவசியம்' என்றார். சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சேர்மன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'கடந்த 24 ஆண்டுகளாக நடந்து வரும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி, நாட்டின் பிற பெரிய புத்தகக் கண்காட்சியை விட சிறந்ததாக உள்ளது. வாசிப்பும், இலக்கியமும் சமூக வளர்ச்சிக்கு அவசியமாகும். நினைவாற்றலை மேம்படுத்தவும், உண்மையான அறிவை பெறவும் புத்தக வாசிப்பு மட்டுமே உதவும். ஸ்மார்ட் சாதனங்கள் மனிதர்களை புத்திசாலி ஆக்குவதில்லை. புத்தகம் வாசிப்பு என்பது மன அழுத்தத்தை போக்கும். மாணவர்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்' என்றார்.சிறந்த எழுத்தாளராக ஜெயஸ்ரீ, சிறந்த பதிப்பகமாக செண்பகா பதிப்பக உரிமையாளர் கவுரவிக்கப்பட்டனர். ஹரிராமகிருஷ்ணன் எழுதிய 'உலகை வெல்ல உன்னை வெல்' என்ற நுாலும், உதயகுமார் எழுதிய 'கல்வி ஆளுமை வளர்ச்சி' என்ற நுாலும் வெளியிடப்பட்டன. முன்னதாக, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சேர்மன் ராதாகிருஷ்ணன், என்.எல்.சி. மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், செயல் இயக்குநர்கள் நாராயணமூர்த்தி, அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ