உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  செய்முறை தேர்வு துவக்கம் 

 செய்முறை தேர்வு துவக்கம் 

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு துவங்கியது. தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும், மார்ச்.,11ல் துவங்கி, ஏப்., 6ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது. கடலுார் மாவட்டத்திலுள்ள 161 பள்ளிகளைச் சேர்ந்த 32ஆயிரத்து 876 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். வரும், 28ம் தேதியுடன் செய்முறைத்தேர்வு முடிவடைகின்றன. மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !