உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்டு ஒப்படைப்பு

ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்டு ஒப்படைப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு, உரியவரிடம் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.சிதம்பரம் லால்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் 40 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி கும்பலிடம் இழந்தார். இதுதொடர்பாக சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் அமலா மற்றும் போலீஸ் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு, மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்து 8 லட்சம் ரூபாயை மீட்டனர்.மேலும், ஆன்லைன் கடன் செயலி மூலம் ஏமாற்றப்பட்ட கடலுார் தவகுமார் டேவிட் என்பவரின் 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. இவர், சைபர் கிரைம் மோசடி குறித்து உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்ததால், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு முடக்கப்பட்டு பணம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பணத்தை உரியவரிடம் எஸ்.பி., ஜெயக்குமார் ஒப்படைத்தார்.யாரேனும் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு எஸ்.பி, கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ