உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செங்குளவி கூடு அழிப்பு 

செங்குளவி கூடு அழிப்பு 

பெண்ணாடம்: வாகன ஓட்டிகள், விவசாயிகளை அச்சுறுத்திய செங்குளவி கூட்டை தீயணைப்புத்துறையினர் அழித்தனர். பெண்ணாடம் அடுத்த சுமைதாங்கி - பெ.பூவனுார் சாலையிலுள்ள அரியராவி அருகே சாலையோர பனை மரத்தில் செங்குளவிகள் கூடு கட்டியிருந்தன. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், வயல்களுக்கு செல்லும் விவசாயிகள் அந்தப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதுபற்றி 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதுபற்றி கவனத்திற்கு வந்த உடன், திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயிட்டு செங்குளவி கூட்டை முற்றிலும் அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை