மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
18-Jul-2025
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில், சிவப்பு தின விழா நடந்தது. எல்.கே.ஜி., முதல், இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்திருந்தனர். மாணவர்கள் சிவப்பு நிறத்திலான காய்கறி, பழ வகை கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். மாறுவேடப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாளாளர் மாவீரமல் சோரடியா பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் பத்தாகான் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தார்.
18-Jul-2025