உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்

நடுவீரப்பட்டு: மலட்டாறில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. பண்ருட்டி, மேல்குமாரமங்கலம் அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் ராஜேஷ்,13; இவர் அரசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்றார். கடந்த 21ம் தேதி காலை 10:00 மணிக்கு அரசூர் கிராமத்தின் வழியே செல்லும் மலட்டாறில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார். சிறுவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்பேரில், நேற்று டி.ஆர்.ஓ., ராஜசேகரன் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ராஜேந்திரனிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !