மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
01-Aug-2025
திட்டக்குடி : திட்டக்குடி அருகே கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அமைச்சர் கணேசன், நிவாரண உதவி வழங்கினார். திட்டக்குடி அடுத்த புதுக்குளத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி செல்லம், 55; இவர் கடந்த 6ம் தேதி மாலை அவரது நிலத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தனிப்படை போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த செல்லத்தின் குடும்பத்தினர், கொலையாளி களை கைது செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக்கூறி உடலை வாங்க மறுத்த நிலையில், அமைச்சர் கணேசனின் பேச்சுவார்த்தையை ஏற்று நேற்று முன்தினம் உடலை வாங்கி அடக்கம் செய்தனர். அமைச்சர் கணேசன் நேற்று செல்லத்தின் கணவர், மகனிடம் ஆறுதல் கூறி, நிவாரண உதவியாக ரூ. 50 ஆயிரம் வழங்கினார்.
01-Aug-2025