உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருத்தாசலம்; விருத்தாசலம் பங்களா தெருவில் இருந்த ஆக்கிமிப்புகள் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.விருத்தாசலம் பங்களா தெருவில் மளிகை, அரிசி, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு, கடை நடத்தி வருபவர்கள் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்தனர். இதனால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவததியடைந்து வந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், கமிஷனர் பானுமதி ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் பங்களா தெருவில் இருந்த ஆக்கிரமிபபுகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை