உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

 தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில், பெண்ணாடம் குறுவட்டம் தலைமையிடமாக உள்ளது. இதனை சுற்றி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், பெ.பூவனுார், அரியராவி, சவுந்திரசோழபுரம், செம்பேரி, தாழநல்லுார், கொத்தட்டை, பெ.பொன்னேரி, கொசப்பள்ளம், முருகன்குடி உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் கூரை வீடுகள் உள்ளன. இந்த கிராமங்களில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளின் போது மீட்பு பணிக்காக, 15 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி, விருத்தாசலம் மற்றும், 20 கி.மீ., துாரமுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டும். அதற்குள் சேதம் அதிகமாவதுடன் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது. அதனால், பெண்ணாடத்தை தலைமையிடமாகக்கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தீ மற்றும் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர் கதையாக நீண்டு வருகின்றன. பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ