உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூருடன் இணைக்க கோரிக்கை

திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூருடன் இணைக்க கோரிக்கை

ராமநத்தம்: வேப்பூர் அருகிலுள்ள திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் தாலுகாவிலிருந்து 53 வருவாய் கிராமங்களை பிரித்து, கடந்த 2013ல் வேப்பூர் தாலுகா உருவாக்கப்பட்டது.இந்நிலையில், வேப்பூருக்கு அருகிலுள்ள தொண்டங்குறிச்சி, புல்லுார், கல்லுார், ம.புடையூர், ஆவட்டி, பாசார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்னும் திட்டக்குடி தாலுகாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.திட்டக்குடியிலிருந்து 15 - 20 கி.மீ., தூரமுள்ள இந்த கிராமங்கள் 6 கி.மீ., தூரமுள்ள வேப்பூர் தாலுகாவுடன் இணைத்தால் பொதுமக்கள் அலைக்கழிப்பது தவிர்க்கப்படும். மேலும், கூடுதல் செலவினம், கால விரையம் ஏற்படாமல், மக்களின் கோரிக்கை விரைந்து செயல்படுத்த முடியும்.இதுகுறித்து அப்பகுதியினர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தும், கோரிக்கை கிடப்பில் உள்ளது. எனவே, வேப்பூருக்கு அருகிலுள்ள திட்டக்குடி தாலுகா கிராம மக்களின் கருத்துகளைக் கேட்டு, அருகேயுள்ள தாலுகாவுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ