உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு டவுன் பஸ் இயக்க கோரிக்கை

 அரசு டவுன் பஸ் இயக்க கோரிக்கை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இருந்து கட்டியநல்லுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கென அரசு டவுன் பஸ் இயக்கப்படாததால், 4 கி.மீ., துாரம் உள்ள கோ.பூவனுார் பகுதிக்கு நடந்து சென்று பஸ் ஏறிச் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு தினசரி தாமதமாக செல்லும் நிலை உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ