சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை
புதுச்சத்திரம் ; புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன் பேட்டையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இந்த பூங்காவில் உள்ள சீசா, சருக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் சிறுவர் பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இப்பகுதி சிறுவர், சிறுமிகள் பயன்பெறும் வகையில் வேளங்கி ராயன்பேட்டையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்