உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராமநத்தத்தில் வார சந்தை வளாகம் அமைக்க கோரிக்கை

ராமநத்தத்தில் வார சந்தை வளாகம் அமைக்க கோரிக்கை

ராமநத்தம்: ராமநத்தத்தில் வாரச்சந்தை சாலையை ஆக்கிரமித்து நடப்பதால் பொது மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதியாக ராமநத்தம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு எளிதில் செல்ல முடிவதால் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.மேலும், சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் சொந்த தேவைக்காக தினசரி வந்து செல்கின்றனர்.இந்நிலையில், ராமநத்தம் ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறிகள், மளிகை பொருட்கள் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு, வாரச்சந்தை வளாகம் இல்லாததால், ராமநத்தம் கூட்டுரோடு, கொரக்கவாடி சாலை, பழைய ராமநத்தம் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் உள்ளது.எனவே, ராமநத்தத்தில் வாரச்சந்தை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை