பெ.பூவனுார் சாலை அகலப்படுத்த கோரிக்கை
பெண்ணாடம்; பெண்ணாடம் - பெ.பூவ னுார் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி வேன் உட்பட ஏராளமான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், இவ்வழியாக அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார், காரையூர், வெண்கரும்பூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்ல முடியாமல் விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பெ.பூவனுார் தார் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.