ஓய்வு பெற்ற அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். துணைத்தலைவர் வேலுசாமி முன்னிலையில், புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. முருகன், ராஜகோபால் ஆகியோர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இதில் தலைவராக செல்வராஜ், துணைத் தலைவராக வேலுசாமி, பொருளாளர் பூவராகமூர்த்தி, செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் கரூவூலக கிளை அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுப்பது, அம்ரூத் குடிநீர் திட்டம், மின் மயான கட்டடம் உள்ளிட்ட பணிகளுக்கு நன்றி தெரிவித்தல், ஓய்வு பெற்ற அலுவலர்களில் 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.