தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் தவற விட்ட பணம் மற்றும் மொபைல் போனை மீட்டு போலீசார் உயிரிடம் ஒப்படைத்தனர். அரியலுார் மாவட்டம், முருகன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெனித்ரீகன் மனைவி அனிதா,30; காட்டுமன்னார்கோவில் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மதியம் பஸ் ஏறும் போது கையில் வைத்திருந்த 16 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம், மொபைல் போனை தவற விட்டுள்ளார். இதுகுறித்து அவர் காட்டுன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார், கண்காணிப்பு கேமரா உதவியுடன், அனிதா தவற விட்ட பணம், மொபைல் போனை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.