உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வருவாய்த்துறையினர் ஊர்வலம், தர்ணா அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு  

வருவாய்த்துறையினர் ஊர்வலம், தர்ணா அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு  

கடலுார் : கடலுாரில் வருவாய்த்துறையினர் சார்பில் ஊர்வலம் , தர்ணா போராட்டம் நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் நேற்று வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஊர்வலம் சென்றனர். அண்ணா பாலம் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே முடிவடைந்தது. பின்னர் வருவாய் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்கம் செந்தில்முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் திருமால்வளவன், நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு நீல்ராஜ், வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் தினகரன் முன்னிலை வகித்தனர். பூபாலசந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் பக்கிரிசாமி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் ஜான் போஸ்கோ, மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் பணிபுரியும் 1711 வாய்த்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய் துறை பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சான்றிதழ்களுக்காக கிராம நிர்வாக அலுவலகங்கள், தாலுகா அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை