உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் கொள்முதல் நிலையம்; விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம்; விவசாயிகள் கோரிக்கை

விருத்தாசலம்; தொரவளூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடக் கோரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விருத்தாசலம் மணிமுக்தாறு நீர்ப்பாசன விவாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தனவேல் அறிக்கை: விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. நடப்பாண்டில் சம்பா அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.நெல்லுக்கு போதிய விலை இல்லாத நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையமும் திறக்கப்படாததால் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை உள்ளது. எனவே, தொரவளூர் கிராமத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ