உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதை ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் தர்ணா

பாதை ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் தர்ணா

விருத்தாசலம்: கீரம்பூர் கிராமத்தில் நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து, கிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவல கத்தை முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அடுத்த கீரம்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மதியம், 12:00 மணியளவில், ஆர்.டி.ஓ., அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. தகவலறிந்த ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ் சமாதானம் செய்தார். அவரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: 'கீரம்பூர் கிழக்கு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள பொது பாதை வழியை மாணவர்கள், கிராம மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தெரு முகப்பில் உள்ள தனிநபர்கள் பாதையை ஆக்கிரமித்து மாடுகள் கட்டி, இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனை தட்டிக்கேட்டால் முறையற்ற வகையில் பேசி, மிரட்டல் விடுக்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி, நாங்கள் பயன்படுத்த பாதையை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வேப்பூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக நேர்முக உதவியாளர் தெரிவித்ததையேற்று, அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை