உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை சீரமைக்க தேவை

சாலை சீரமைக்க தேவை

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் குழந்தைகள் மையத்திற்கு செல்லும் சாலை சுகாதார சீர்கேடாக உள்ளதால் நோய்தொற்று ஏற்படும் நிலை உள்ளது.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மைய கட்டடம், மேல்நிலைநீர்தேக்க தொட்டி ஆகியவைகள் உள்ளன.குழந்தைகள் மையத்திற்கு செல்லும் வழி சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. இதனால், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, குழந்தைகள் மையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை