சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சய மந்திர் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம், பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலையில் துவங்கி, தீர்த்தாம்பாளையம் வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.நிகழ்ச்சியில், பைக் ஓட்டுநர்களுக்கு, பள்ளி தாளாளர் புருஷோத்தமன் ஹெல்மெட் வழங்கினார். மேலும், ஆணையாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் முழுதும் சுத்தம் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்னன மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.