மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தலைமை ஆசிரியர் சசிரேகா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அன்பழகன், சாலை பாதுகாப்பு அமைப்பு பொறுப்பாசிரியர் பாபாஜி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் சப் இன்ஸ்பெக்டர் பொட்டா சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து, விருத்தாசலம்- உளுந்துார்பேட்டை சாலையில் சென்ற வாகனஙங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் விலங்கியல் ஆசிரியர் ராமமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த எழிலரசன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் சாலை பாதுகாப்புக் குழு மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Jan-2025