உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்ளையடிக்க திட்டம்  2 பேர் கைது: மூவருக்கு வலை

கொள்ளையடிக்க திட்டம்  2 பேர் கைது: மூவருக்கு வலை

கடலுார், செப். 25– கடலுார் அருகே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  துாக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, நல்லாத்துார் வேளாண் கூட்டுறவு வங்கி அருகில் நின்றிருந்த 5 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். சந்தேகமடைந்த போலீசார், ஓடியர்வர்களில் இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நல்லுாத்தார் விமல்ராஜ் மகன் அசோக்குமார்,19; அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், கூட்டுக் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நல்லாத்துார் அலெக்ஸ் பாண்டியன்,17; வயது சிறுவன், புதுச்சேரி கார்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !