ரோல்பால் சாம்பியன்ஷிப்; தமிழக அணி மூன்றாமிடம்
விருத்தாசலம்; தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.அசாம் மாநிலம், கவுகாத்தியில், மினி தேசிய ரோல்பால் போட்டி கடந்த 18 முதல் 21ம் தேதி வரை நடந்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிகள் பங்கேற்றன. அதில், 21ம் தேதி நடந்த இறுதிச் சுற்றில் மகாராஷ்டிரா அணியை 63 கோல் கணக்கில், தமிழக அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.கடலுாரை சேர்ந்த 6 ம் வகுப்பு மாணவி அஷசிதா உள்ளிட்ட சாதனை படைத்த வீரர்களை, தென்னிந்திய செயலாளர் சுப்ரமணியம், மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். துணைத் தலைவர் பிரேம்நாத், பொருளாளர் ராஜசேகர் உடனிருந்தனர்.