உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /   ரூ.1.50 லட்சம் பறிமுதல்  

  ரூ.1.50 லட்சம் பறிமுதல்  

புவனகிரி: சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கீரப்பாளையம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது எந்த ஆவணமும் இன்றி, ரூ.1.50 லட்சம் எடுத்து வந்த சேலம், அரிசிபாளையம் ராமநாதன் மனைவி சுமத்திரா என்பவரிடமிருந்து பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து புவனகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ