உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல்

கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறைஅலுவலர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார்.ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.சங்க முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உட்பட 151 பேரை கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ