உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துப்பாக்கி சுடும்போட்டிக்கு தகுதிபெற்ற தலைமைக்காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு

துப்பாக்கி சுடும்போட்டிக்கு தகுதிபெற்ற தலைமைக்காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு

கடலுார்: தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பெண் தலைமைக்காவலரை எஸ்.பி.,பாராட்டினார். தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன் சார்பில், 50வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை குருநானக் கல்லுாரியில் கடந்த மாதம் 14ம் தேதி வரை நடந்தது. தமிழ்நாடு காவல்துறை விளையாட்டு ஆணையம் மூலம், கடலுார் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ்நிலைய பெண் தலைமைக் காவலர் ராஜேஸ்வரி பங்கேற்றார். அவர் 50மீட்டர் பீப்சைட் ரைபிள் பிரிவில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றார். மாநில அளவிலான போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி வென்றும், அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று சாதனை படைத்த தலைமைக்காவலர் ராஜேஸ்வரியை, கடலுார் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் நேரில் அழைத்துப் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை