பருவ மழையை எதிர்கொள்ள பாதுகாப்பு உபகணங்கள் தயார்
பரங்கிப்பேட்டை: வடக்கிழக்கு பருவ மழையயை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வடக்கிழக்கு பருவ மழை வரும் 17ம் தேதி முதல் துவங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது,கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் மின் மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரம், மழை நீரை வெளியேற்றும் மோட்டார் பம்ப், மண் வெட்டி மற்றும் மீட்பு பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை, செயல் அலுவலர் மயில்வாகனன் பார்வையிட்டார்.