சாய்பாபா பிறந்தநாள் பூஜை.
நெல்லிக்குப்பம்.நவ26- காராமணிக்குப்பத்தில் சாய்பாபா பிறந்த நாள் பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் புட்டபர்த்தி சாய்பாபா சமிதி உள்ளது. இங்கு சாய்பாபாவின் 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாய்பாபா படத்தை அலங்கரித்து பூஜைகள் செய்தனர். ரமணி ஐயர், ஜெயக்குமார் ஐயர் தலைமையில் ஏராளமான பக்தர்கள் சாய்பாபா பஜனை பாடல்களை பாடி வழிபட்டனர். சாய்பாபாவின் பெருமைகள் பற்றி ரமணி ஐயர் உரையாற்றினார்.