உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம்: மா.கம்யூ., கோரிக்கை மனு

 ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம்: மா.கம்யூ., கோரிக்கை மனு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, மா.கம்யூ., கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அறிவுடைநம்பியிடம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் அளித்த மனு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு 440 ரூபாய் மட்டுமே சம்பளம்வழங்கப்படுகிறது. இவர்களுக்கு புதிய ஊதியத்தை அமல்படுத்தவது மட்டுமின்றி வேலை செய்த நாட்களுக்கும் பாக்கி நிலுவை தொகை சேர்த்து வழங்க வேண்டும்.ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர செயலாளர் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பூபதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி