மேலும் செய்திகள்
சாக்கு மூட்டையில் மணல் கடத்திய பெண்கள் கைது
22-May-2025
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு மணல் கடத்திய லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். கடலுார் மாவட்டம், பெண்ணாடம்- செம்பேரி இடையே வெள்ளாற்றங்கரையில் இருந்து நேற்று மாலை 4:30 மணிக்கு வெளி மாவட்டத்திற்கு ரெடிமிக்ஸ் லாரியில் ஜல்லியுடன் மணல் கடத்திச் செல்வதாக கூறி இளைஞர்கள், கிராம மக்கள் லாரியை சிறைபிடித்தனர். தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 7:30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ரெடிமிக்ஸ் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.
22-May-2025