உள்ளூர் செய்திகள்

 மணல் கடத்தல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, குருவன்குப்பம் வனப்பகுதி வழியாக வந்த இரண்டு டிராக்டர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். போலீசாரை கண்டதும் டிராக்டர்களை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் தப்பியோடினர். விசாரணையில், ஓடையில் இருந்து கள்ளத்தனமாக மணல் கடத்திச்சென்றது தெரிந்தது. டிராக்டர்களை போலீசர் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ