உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.சிதம்பரம் ஞானபிரகாசம் குளக்கரையில் நடந்த நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் சஞ்சீவ் குமார் வரவேற்றார். முன்னாள் பொருளாளர் அருள் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் தீபக்குமார் மரக்கன்றுகள் நட்டார். குளத்தில், களைகள் எடுத்து பராமரிப்பதற்காக மண்வெட்டி, கடப்பாரை, களை எடுப்பதற்கான பொருட்களை ஞானபிரகாசம், குளக்கரையின் காவலர் சுரேஷிடம் வழங்கினார். நிர்வாகி ஏகாம்பரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை